பல கட்டண முறைகளை உள்ளமைகளாம்
Zakya மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் cash, card, காசோலை, வங்கிப் பரிமாற்றம் மற்றும் UPI அடிப்படையிலான கட்டணங்கள் என்று தங்களுக்கு விருப்பமான முறையில் கட்டணங்களைப் பூர்த்தி செய்யலாம்.
பல்வேறு டெண்டர் வகைகளைச் சேர்க்கலாம்
உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்றவாறு உங்கள் பில்லிங் பயன்பாட்டில் பல டெண்டர் வகைகளை அமைக்கலாம்: cash, card, UPI, வங்கிப் பரிமாற்றம், net banking சேவை மற்றும் பல. Zakya-வின் முதன்மைக் கட்டண முறை cash என்றாலும், விரைவான பரிவர்த்தனைகளுக்கு மீதமுள்ள ஐந்தையும் நீங்கள் மறுவரிசைப்படுத்தலாம்.
Credit அடிப்படையிலான கட்டணங்களை ஏற்கலாம்
வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வாங்குவதற்குப் பிறகு பணம் செலுத்துவதற்கான flexibility-ஐ வழங்குங்கள். சில வாடிக்கையாளர்கள் மாதாந்திர கட்டண முறையை விரும்புவார்கள், மாதத்தின் தொடக்கத்தில் தங்கள் வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி, மாத இறுதிக்குள் தங்கள் பில்களை செட்டில் செய்வார்கள். இந்த பரிவர்த்தனைகள் மற்றும் அவற்றின் பணம் செலுத்த வேண்டிய தேதிகளை Zakya உடன் சிரமமின்றி கண்காணியுங்கள்.
Split அடிப்படையிலான கட்டணங்கள்
உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தங்களின் கட்டணங்களை வெவ்வேறு முறைகளில் பிரித்து pay செய்வதற்கான வசதியை வழங்குங்கள். Cash, card மற்றும் UPI ஆகியவற்றின் கலவையுடன் பணம் செலுத்த அவர்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளரின் மொத்த கொள்முதல் ரூ.5,000 எனில், ரூ.3,000 ரொக்கமாகச் செலுத்தி மற்றும் மீதமுள்ள தொகையை அவர்களது card-உடன் செலுத்தலாம். இவ்வாறு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பிரித்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பம் Zakya-வில் உள்ளது.
டைனமிக் UPI QR குறியீடுகளை உருவாக்கலாம்
ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனைக்கான டைனமிக் QR code-ஐ உருவாக்க PhonePe மற்றும் Paytm கட்டண நுழைவாயில்களுடன் இணைக்கவும் மற்றும் வெவ்வேறு UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விரைவான checkout-ஐ வழங்கலாம்.

டிஜிட்டல் payments-ஐ தடையின்றி ஏற்றுக்கொள்ளுங்கள்
பரிவர்த்தனைகளை விரைவாகச் செயல்படுத்தப் பிரபலமான payment providers-உடன் இணைந்து, wallet, UPI மற்றும் card போன்ற online கட்டணங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒருங்கிணைந்த payments
Paytm மற்றும் Pine Labs போன்ற பிரபலமான சாதனங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தடையில்லாமல் கட்டணங்களைச் செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்வு செய்யலாம் - Wallet, UPI, credit card, debit card மற்றும் பல. Zakya தானாகவே பரிவர்த்தனை data-வை EDC சாதனத்துடன் sync செய்கிறது. இது உங்கள் salesperson manual entry செய்யும் தேவையை நீக்குகிறது.
ஆன்லைனில் பணம் செலுத்துவதை எளிதாக செயல்படுத்தலாம்
Verifone, Razorpay மற்றும் Stripe போன்ற ஆன்லைன் கட்டண நுழைவாயில்களுடன் ஒருங்கிணைத்து, உங்கள் ஆன்லைன் மற்றும் மொபைல் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்களின் debit மற்றும் credit card மூலம் உங்களுக்குப் பணம் செலுத்தும் வசதியை வழங்குங்கள்.

பயனுள்ள கட்டண ரிபோர்ட்ஸ்ஐ பார்க்கலாம்
பெறப்பட்ட கட்டணங்கள் மற்றும் refunds-ஐ track செய்து உங்கள் விற்பனை செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகள் பற்றிய சிறந்த நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.
பெறப்பட்ட கட்டணங்களைக் கண்காணியுங்கள்
உங்கள் எல்லா விற்பனை நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து கட்டணங்களின் விரிவான கண்ணோட்டத்தைப் பெறுங்கள். கட்டண எண், தேதி, வாடிக்கையாளர் பெயர், கட்டண முறை, கட்டண வகை மற்றும் உங்கள் வணிகத்திற்கு வரும் பணத்தைக் கண்காணிக்கச் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை போன்ற தகவல்களைப் பார்க்கலாம்.
வாடிக்கையாளர் refund வரலாற்றைக் கண்காணியுங்கள்
உங்கள் ஸ்டோரின் அனைத்து refund பரிவர்த்தனைகள், refund-இன் தேதி, வாடிக்கையாளரின் பெயர், முறை மற்றும் துல்லியமான நிதிப் பதிவுகளைப் பராமரிக்கத் தொகை ஆகியவற்றுடன் பதிவைப் பார்க்கலாம்.

உங்கள் கட்டணத் தகவலை மையமாக நிர்வகிக்கலாம்
வாடிக்கையாளர் பெயர், விலைப்பட்டியல், பயன்முறை, தொகை, பயன்படுத்தப்படாத தொகை மற்றும் பிற விவரங்கள் போன்ற கட்டண விவரங்களுடன் உங்கள் எல்லா விற்பனை நிலையங்களிலும் நடக்கும் அனைத்து பரிவர்த்தனைகளையும் பார்க்கலாம். உங்கள் எல்லா purchase-களுக்கும் விற்பனையாளர்களுக்குச் செலுத்தப்பட்ட கட்டணங்களையும் நீங்கள் இதேபோல் பார்க்கலாம்.

மொபைல் payments-ஐ எளிதாக ஏற்றுக்கொள்ளுங்கள்
Android மற்றும் iOSகான Zakya POS application, கைமுறையாகப் பணம் செலுத்த அனுமதிக்கிறது: cash, card, UPI மற்றும் credit விற்பனை. வாடிக்கையாளரின் விருப்பமான கட்டண முறையை எளிதாகத் தேர்ந்தெடுங்கள், மேலும் அனைத்து பரிவர்த்தனைகளும் பின் தளத்தில் உள்நுழைந்து, பணப்புழக்கத்துடன், விற்பனையாளர்களுக்குப் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது.

ஆஃப்லைனில் இருக்கும்போது பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தலாம்
உங்கள் internet செயலிழந்தாலும் கைமுறையாகப் பணம் வாங்குவதைத் தொடரவும்; இணைப்பு மீட்டமைக்கப்படும் போது, உங்கள் பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தும் தானாகவே மீண்டும் sync செய்யப்படும்.
