தமிழ்நாட்டின் மாவட்ட வன அலுவலகம் ecotourism-யை Zakya-வுடன் நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்துகிறது

ஊட்டியைச் சுற்றியுள்ள எங்களின் ecotourism தளங்கள் அனைத்திலும் நிகழ் நேரக் கட்டுப்பாட்டில் Zakya எங்களுக்கு உதவியது. நாங்கள் ticketing-ல்  உள்ள ஓட்டைகளைச் சரி செய்துள்ளோம், செயல்பாடுகளை நெறிப்படுத்தியுள்ளோம், மேலும் Zakya-வை  செயல்படுத்திய முதல் நான்கு மாதங்களில் வருவாயில் 20% அதிகரிப்பைக் கண்டோம். இப்போது, இந்த ecospots-ல் இருக்கும் செயல்முறை நுணுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற முக்கியமான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது.

தேவராஜ்உதவி மாவட்ட வன அதிகாரி, நீலகிரி பிரிவு

நிறுவனம் பற்றி

ஊட்டியில் உள்ள மாவட்ட வன அலுவலகம் நீலகிரி மாவட்டத்தின் வன வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. அவர்கள் இப்பகுதியில் உள்ள அழகிய நிலப்பரப்புகள் மற்றும் சுற்றுலா இடங்களை மேற்பார்வையிடுகின்றனர். மாவட்ட வன அதிகாரி (DFO) சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவின் முக்கியமான உறுப்பினராக உள்ளார். சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு என்பது முதன்மையாக உள்ளூர்வாசிகள், பிரதானமாக பழங்குடியின நபர்களைக் கொண்டுள்ள சமூகம் சார்ந்த குழு ஆகும். நீர்வீழ்ச்சிகள், பார்வையிடும் இடங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களை பராமரித்து பாதுகாப்பதில் DFO ஒரு பரந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். டிக்கெட்டுகளை வழங்கி நுழைவு கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் ecotourism இடங்களை பராமரிக்க அவர்கள் ஒரு விரிவான அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர். இந்த பன்முகப் பாத்திரம் வேலைவாய்ப்பை உருவாக்குதல், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

உள்ளூர் சமூக உறுப்பினர்களைக் கொண்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு, பயணச்சீட்டு வருவாயில் ஒரு சதவீதத்தில் இருந்து பயனடைகிறது. இது சுற்றுலாவின் பொருளாதார ஆதாயங்கள் சமூகத்தின் நலனுக்கு நேரடியாக பங்களிப்பதை உறுதி செய்கிறது. தற்போது, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு, DFO-வின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் 20க்கும் மேற்பட்ட தனிநபர்களுடன், எட்டு Ecotourism-த் தளங்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்கிறது. இந்த கூட்டு முயற்சியானது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு இந்த இயற்கை இடங்களின் பயனுள்ள மேற்பார்வை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உறுதி செய்கிறது.

எதிர்கொள்ளும் சவால்

DFO தலைமையிலான ecotourism தளங்கள், கொள்ளைகள், வருவாய்த் தடைகள் மற்றும் செயல்பாட்டுத் திறமையின்மை போன்ற வலிமையான சவால்களை எதிர்கொண்டன. தற்போதுள்ள தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ATVMகள்), விரைவாக டிக்கெட்டு வழங்குவதில் திறமையானவையாக இருந்தாலும், real time data-வை வழங்குவதிலும், முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் போதுமானதாக இல்லை.

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நுழைவுக் கட்டணத்தை வசூலிக்க ATVMகளைப் பயன்படுத்தினோம், ஆனால் கண்காணிப்புத் திறன்களில் அதன் வரம்புகள் பல்வேறு ஓட்டைகளை உருவாக்கின. ஊழியர்களால் டிக்கெட்டுகள் நகல் எடுக்கப்பட்டன, மேலும் தெரிந்த நபர்களுக்கு டிக்கெட் வழங்காத நிகழ்வுகள் உள்ளன. இவை அனைத்தும் குறிப்பிடத்தக்க வருவாய்த் தடைக்கு வழிவகுத்தது. எங்களிடம் மிகக் குறைவான மேற்பார்வை இருந்ததால், முரண்பாடுகள் குறித்து நாங்கள் அறியாமல் இருந்தோம்.

தேவராஜ்உதவி மாவட்ட வன அதிகாரி, நீலகிரி பிரிவு

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான இந்த அழுத்தமான தேவை மற்றும் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல் ஆகியவை real time-ல் செயல்படும் சரியான தீர்வுடன் டிஜிட்டல் மயமாவதற்கு முக்கியமான படியை எடுக்க வைத்தது.

சவாலுக்கான தீர்வு

ஆரம்பத்தில், ecospots-ல் நடக்கும் செயல்பாடு, ticketing மற்றும் திருட்டு ஆகியவற்றைக் கண்காணிக்க எந்த வழியும் இல்லை, ஏனெனில் இதற்கு DFOகளின் நிலையான இருப்பு தேவைப்பட்டது. பரந்த நிலப்பரப்பு  மற்றும் செயல்பாட்டுக் கோரிக்கைகளின் அடிப்படையில் இது நடைமுறைக்கு மாறான எதிர்பார்ப்பு. Zakya மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பை ஒரு யதார்த்தமாக்கியது, எங்கிருந்தும், எந்த நேரத்திலும் எட்டுக்கும் மேற்பட்ட ecospots-த் தளங்களை real time-ல் கட்டுப்படுத்த உறுதிசெய்தது.

எங்களால் இப்போது அனைத்து ecospots-களையும் கண்காணிக்க முடியும் மற்றும் அவை அனைத்தையும் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும், இது முன்பு சாத்தியமில்லை. எங்கள் ticketing system Zakya உடன் 100% துல்லியமாக உள்ளது, மேலும் எங்கள் வருவாய் கசிவுகள் அனைத்தும் தடுக்கப்பட்டன. இப்போது, ​​எந்தவொரு ecospot-யிலும் real time-ல் என்ன நடக்கிறது என்பதை, உண்மையில் அங்கு இல்லாமல் நாங்கள் அறிவோம்.

தேவராஜ்உதவி மாவட்ட வன அதிகாரி, நீலகிரி பிரிவு

Zakya பாரம்பரிய embedded systems-க்கும் மேல் சென்று, நுழைவுக் கட்டண வசூல், மற்றும் டிக்கெட் வழங்கும் போது வாடிக்கையாளர் விவரங்களைத் தடையின்றி சேகரிப்பதன் மூலம் ஆழமான trend analysis-க்கு உதவுகிறது. இந்த நுண்ணறிவு, பார்வையாளர்களின் அமைப்பு மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறது. மேலும், இது DFO-க்கு பார்வையாளர்களின் data-வைக் கண்காணிக்கவும், நிலையான பாதுகாப்பு முயற்சிகளை உறுதி செய்வதற்காகப் பருவகால மாறுபாடுகளின் அடிப்படையில் reserve forest spots-களின் அழுத்தத்தை மதிப்பிடவும் அதிகாரம் அளிக்கிறது.

பயன்கள் மற்றும் ROI

Zakya role-based கட்டுப்பாடுகளை விதிக்க user-களுக்கு அனுமதிக்கிறது, எனவே முக்கியமான தகவலுக்கான access தேவைப்படும்போது பாதுகாப்பாக நிறுத்தப்படும். இது அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள், வருவாய் போன்ற முக்கியமான data-களை சேதப்படுத்துவதைத் தடுக்கிறது. Ecotourism spots-ல் பணியாளர்கள் சமர்ப்பிக்கும் வருவாயை, system பதிவுகளுடன் ஒப்பிட DFO-வை அனுமதிப்பதில் இது ஒரு முக்கிய பங்காற்றியதாக நிரூபித்துள்ளது. இந்த இடைவெளியைக் குறைப்பதன் மூலம், Zakya முரண்பாடுகளைக் கண்டறிந்து சரிசெய்ய உதவுகிறது, ஓட்டைகளைத் திறம்பட கட்டுப்படுத்துகிறது மற்றும் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான நிதி மேலாண்மை அமைப்பை உறுதி செய்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், Zakya-வின் inclusivity மற்றும் டிஜிட்டல் தடைகளை மீறும் திறன், பல்வேறு தொழில்நுட்ப பரிச்சயம் கொண்ட பயனர்கள் தங்கள் நடைமுறைகளில் system-யை தடையின்றி இணைக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

எங்கள் எட்டு ecospot-களிலும் Zakya செயல்படுத்திய பிறகு, முதல் நான்கு மாதங்களில் ஒட்டுமொத்த வருவாயில் குறிப்பிடத்தக்க 20% அதிகரிப்பைக் கண்டோம். Zakya எங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்தியதாலும், அதன் துல்லியமான அம்சங்களுடன் அனைத்து பரிவர்த்தனைகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்ததாலும் இது சாத்தியமாயிற்று.

தேவராஜ்உதவி மாவட்ட வன அதிகாரி, நீலகிரி பிரிவு

நாங்கள் எதிர்நோக்குவது

"Zakya-வைத் பயன்படுத்திய பிறகு ஏற்பட்ட நிறைவான விளைவுகளால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம், மேலும் எங்கள் பரிந்துரையால் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட வன அலுவலகங்கள் Zakya-வை செயல்படுத்த வழிவகுத்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முன்னோக்கிப் பார்க்கும்போது, சுற்றுலாக் கட்டண வசூலில் சில மேம்பாடுகளுடன், தமிழ்நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட, வனம் மற்றும் சுற்றுலாத் துறைகள் இரண்டையும் உள்ளடக்கிய தளங்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக Zakya இருக்கும் என நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்று தேவராஜ் கூறினார்.

Zakya-வின் user-friendly interface, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்திராத உள்ளூர் பழங்குடியினருக்குக் கூட எளிதாகப் பயன்படுத்த உதவியது. படிப்படியான onboarding அணுகுமுறை ஒரு வசதியான மாற்றத்தை உறுதி செய்தது, மேலும் அவர்கள் இப்போது எளிதாக Zakya-வைப் பயன்படுத்துகின்றனர்.

தேவராஜ்உதவி மாவட்ட வன அதிகாரி, நீலகிரி பிரிவு
  • Industry typeசேவை
  • Employees50 ஊழியர்களுக்கு கீழ்
  • Type of businessசுற்றுலா
  • Previously Used Software

Features that helped us

Trend analysis reportsUser role-based accessReal-time monitoring
தனிப்பட்ட உதவி தேவையா?