• Customers
  • பிரேஷ் மில்ஸ்

Fresh Mills-இன் வணிக விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியில் Zakya-வின் பங்கு

Zakya-க்கு முன், நாங்கள் மூன்று வெவ்வேறு softwareகளை பயன்படுத்தினோம், ஒவ்வொரு மாற்றத்திற்கும் கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது, பணியாளர் பயிற்சி 2-3 நாட்கள் எடுத்தது, பின்னர் software-உடன் பழகுவதற்குக் குறைந்தபட்சம் 40-50 வாடிக்கையாளர் பில்கள் தேவைப்பட்டன. Zakya-வின் தடையற்ற மாற்றம் மற்றும் user -friendly  இடைமுகம், பயிற்சி தேவையற்றது. செயல்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து எங்கள் ஊழியர்கள் அதைச் சிரமமின்றி பயன்படுத்தத் தொடங்கினர்.

பாரதி கண்ணன்இணை நிறுவனர், Fresh Mills

நிறுவனத்தைப் பற்றி

பெங்களூரில் உள்ள கல்யாண் நகரின் பரபரப்பான பாதைகளில், 2019 ஆம் ஆண்டு முதல் ஆர்கானிக் நன்மைகளை வழங்கி, Fresh Mills புத்துணர்ச்சியின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது. சிறுவயது நண்பர்களான பாரதி கண்ணன் மற்றும் கதிரவன் ஆகியோரால் நிறுவப்பட்டது. முன்னாள் மென்பொருள் பொறியாளரான பாரதி கண்ணன் மற்றும் தன் குடும்பத்தின் ஆழமான வேர்களை விவசாயப் பொருட்களின் மொத்த வணிகத்தில்க் கொண்டிருந்த கதிரவனும் தங்களின் உணவு மீதான பொதுவான அன்பைப் பகிர்ந்து கொண்டதால் இந்த பயணத்தைத் தொடங்கினர். அவர்களின் பயணம் பல்வேறு உணவு தொடர்பான முயற்சிகளை ஆராய்வதில் தொடங்கியது, இது இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Institute of Food Processing Technology) விரிவான பயிற்சிக்கு வழிவகுத்தது. அங்கு, இருவரும் மசாலா பதப்படுத்துதல் முதல் காளான் வளர்ப்பு வரையிலான பல்வேறு தலைப்புகளில் பாடங்களைக் கற்றுக்கொண்டனர். பாரம்பரிய சில்லறை வணிகத்தின் சிக்கலான தன்மைக்கு விடையிருக்கும் வகையில், சமகால சில்லறை விற்பனையில் அரிதாகக் காணப்படும், நவீன சில்லறை விற்பனைக் கடையை ஆன்-சைட் மைக்ரோ மில் மூலம் நிறுவுவதற்கான தெளிவான பார்வையை அவர்கள் கொண்டு வந்தனர். 

2019 ஆம் ஆண்டில், Fresh Mills ஒரு சில்லறை விற்பனைக் கடையாக மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கான முழுமையான அனுபவக் கடையாக உருவெடுத்தது. Fresh Mills-ஐ வேறுபடுத்துவது ஸ்டோரில் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தனித்துவமான மைக்ரோ மில் ஆகும். இது வாடிக்கையாளர்கள் முழு செயலாக்கப் பயணத்தையும் பார்க்க அனுமதிக்கிறது.

Fresh Mills-இன் மைக்ரோ மில், மாவுகள், மசாலாக்கல், மசாலாப் பொடிகள், கொட்டையிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய் மற்றும் தானியங்கள் போன்ற தயாரிப்புகளின் வரிசையை உற்பத்தி செய்கிறது. வாடிக்கையாளர்களை ஆர்கானிக் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மைக்ரோ மில்-இன் வெளிப்படையான செயலாக்க முறைகளைக் கவனிக்கவும் அனுமதிக்கிறது. கூடுதலாக, சில்லறை விற்பனைக் கடையில் உள்நாட்டில் செயலாக்கப்பட்டதைத் தாண்டிய தயாரிப்புகளின் விரிவான தேர்வுகளும் அடங்கும். பரந்த அளவிலான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வாடிக்கையாளர்கள் பல்வேறு மளிகைப் பொருட்களைக் காணலாம். மைக்ரோ மில் மற்றும் வெளியிலிருந்து பெறப்படும் மளிகைப் பொருட்களிலிருந்து சுய-பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளின் கலவையான Fresh Mills, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.

சந்தித்த சவால்

Zakya பற்றி அறிவதற்கு முன், Fresh Mills அதன் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் குறிப்பிடத்தக்கச் சவால்களை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் அவர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பில்லிங் software  அடிப்படை செயல்பாடுகளை மட்டும் ஆதரித்தது, வணிகத்தின் மற்ற முக்கியமான அம்சங்கள் இல்லாமல் பில்லிங் மீது மட்டுமே கவனம் செலுத்தியது.

Fresh Mills அதன் ecommerce தளத்தை அறிமுகப்படுத்தியபோது, physical retail store மற்றும் online platform ஆகிய இரண்டிற்கும் பொதுவான சரக்கு அமைப்பு இல்லாதது பல்வேறு செயல்பாட்டுத் திறனற்ற தன்மைகளுக்கு வழிவகுத்தது. இந்த உணர்தல் அவர்களின் வணிகத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைக்கக்கூடிய நம்பகமான software-ஐ ஆராயத் தூண்டியது.

Zoho -வின் வருடாந்திர பயனர் மாநாடான Zoholics இல் நிறுவனர்கள், பாரதி கண்ணனும் கதிரவனும் கலந்துகொண்டதே, இவர்களின் திருப்புமுனையாக அமைந்தது. இது Zakya உடனான அவர்களின் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான அவர்களின் உருமாறும் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

கிடைத்த தீர்வு

Zoho-வின் பயன்பாடுகளின் தொகுப்புடன் Zakya தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டு, மெதுவாக Fresh Mills-இன் வணிகத்தின் முதுகெலும்பாக மாறியது. இந்த மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் சீராக இருந்தது, செயல்படுத்தும் செயல்முறை நேரத்தை நன்றாகவே மிச்சப்படுத்தியது. முந்தைய அனுபவங்களைப் போலல்லாமல், Zakya-வின் எளிய interface, பணியாளர்களால் விரைவாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு வழிவகுத்தது, விரிவான பயிற்சியின் தேவையையும் நீக்கியது.

Zakya-க்கு முன், நாங்கள் மூன்று வெவ்வேறு softwareகளை பயன்படுத்தினோம், ஒவ்வொரு மாற்றத்திற்கும் கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது, பணியாளர் பயிற்சி 2-3 நாட்கள் எடுத்தது, பின்னர் software-உடன் பழகுவதற்குக் குறைந்தபட்சம் 40-50 வாடிக்கையாளர் பில்கள் தேவைப்பட்டன. Zakya-வின் தடையற்ற மாற்றம் மற்றும் user -friendly  இடைமுகம், பயிற்சி தேவையற்றது. செயல்படுத்தப்பட்ட தருணத்திலிருந்து எங்கள் ஊழியர்கள் அதைச் சிரமமின்றி பயன்படுத்தத் தொடங்கினர்.

பாரதி கண்ணன்இணை நிறுவனர் , Fresh Mills

இதன் விளைவாக, Fresh Mills-இன் நிறுவனர்கள் தினசரி, கடைகளில் செயல்படவில்லை. "Zakya-வில் உள்ள டேஷ்போர்டுகள் மூலம் விற்பனை, கொள்முதல் மற்றும் சரக்குகளை நாங்கள் எங்கிருந்தும் கண்காணிக்கலாம்," என்று கண்ணன் குறிப்பிட்டார். "நாங்கள் கடையில் இருப்பதை நிறுத்திவிட்டு உற்பத்திப் பகுதியில் கவனம் செலுத்தத் தொடங்கினோம், ஏனெனில் எங்கள் கடை எங்களைச் சார்ந்து இல்லை. இப்போது, ​​நாங்கள் உற்பத்தி மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது பற்றித் தொடர்ந்து சிந்திக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் Zakya மட்டும் தான்."

ஜக்யாவின் செயல்திறன் அவர்கள் உற்பத்தி, வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த அனுமதித்தது. Zoho-வின் சுற்றுச்சூழல் அமைப்புடன் எளிதாகப் பயன்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை Fresh Mills நிறுவனத்திற்கு ஒரு விரிவான தீர்வுடன் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்து, எதிர்கால வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. 

நன்மைகள் மற்றும் ROI

Zakya செயல்படுத்தல், குறிப்பாக முந்தைய software-இல் இருந்து மாறும்போது, manual taskகளில்  செலவிடும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க வழிவகுத்தது. பில்லிங், accounting மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவை மிகவும் நெறிப்படுத்தப்பட்டு, மொத்த நேரத்தில் 50-60% சேமிக்கப்பட்டது. Zoho பயன்பாடுகளுடன் Zakya-வின் ஒருங்கிணைப்பு, வளரும் செயல்பாடுகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியது. கடையில் அதிகரித்த  வாடிக்கையாளர்களைக் கையாள்வது போன்ற கடினமான பணிகள், இப்போது தடையின்றி மற்றும் தொந்தரவின்றி மாறியது.

SMS அனுப்புதல் மற்றும் CRM ஒருங்கிணைப்பு போன்ற Zakya-வின் அம்சங்கள், வாடிக்கையாளர் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும் எதிர்கால மேம்பாடுகளுக்குத் திட்டமிடுவதற்கும் Fresh Mills-ஐ உந்துதலாக இருந்தது. பில்லிங் செய்யலைப்பாடுகளில் வாடிக்கையாளர்களின் சந்தோஷமான அனுபவங்கள், நேர்மறை தாக்கம், வாடிக்கையாளர் திருப்தியை உயர்த்துவதில் Zakya-வின் பங்கை மேலும் உறுதிப்படுத்தியது.

எதிர்கால எதிர்பார்ப்பு

Fresh Mills, Zakya-உடன் இணைந்திருப்பதால், ஒரு நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை எதிர்பார்க்கிறது, சந்தைக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர்களின் உற்பத்தி அலகுகளை மேம்படுத்துவது முதல் தங்கள் சலுகைகளை விரிவுபடுத்துவது வரை வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்களை கோடிட்டுக் காட்டுகிறது. அவர்களின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, Fresh Mills அதே நகருக்குள் மூன்று புதிய கிளைகளைத் திறப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Zakya உண்மையிலேயே எங்களின் business போட்டியைப் பல மடங்கு மாற்றி அமைத்துள்ளது. Zakya-க்கு முன், அதிகரித்த வாடிக்கையாளர் walk in, பில்லிங் சிக்கல்கள், accounts  மற்றும் வழக்கமாகப் பின்தொடரும் பீதி ஆகியவற்றால் வரும் சவால்களுக்குப் பயந்து, நாங்கள் எங்கள் மார்க்கெட்டிங் முயற்சிகளை முடுக்கிவிடுவதில் சற்று எச்சரிக்கையாக இருந்தோம். Zakya எங்களை முழுமையாக மாற்றியுள்ளது. இது ஒரு point of sale system மட்டுமல்ல; அனைத்து அம்சங்களிலும் பெரிய அளவில் வளர இது எங்களுக்கு 100% நம்பிக்கையை அளித்தது.

பாரதி கண்ணன்இணை நிறுவனர், Fresh Mills

"எங்களுடையது தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட வணிகமாக இல்லாமல் இருந்தாலும், Zakya போன்ற சரியான தொழில்நுட்பத் தீர்வை ஏற்றுக்கொண்டது, சவால்களைச் சமாளிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், விரிவடைந்து கொண்டே இருக்கவும் எங்களுக்கு உதவியது. கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தியது, செயல்பாட்டின் எளிமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், இதற்கான முதலீடு குறிப்பிடத்தக்க வகையில் மிதமானதே", என்று கண்ணன் மகிழ்ச்சியுடன் கூறினார்.

  • Industry typeரீடெயில்
  • Employees50க்கும் குறைவான ஊழியர்கள்
  • Type of businessமளிகை
  • Previously Used Software

Features that helped us

நிகழ்நேர டாஷ்போர்டுCRMதடையற்ற ஒருங்கிணைப்புகள்
தனிப்பட்ட உதவி தேவையா?