Goodspice - இன் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியில் Zakya - வின் பங்களிப்பு

"சரக்குகளை மேலாண்மை செய்வது இதுவரை இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. பொருட்களின் விற்பனையையும், சரக்கு அளவுகளையும் கண்காணிப்பது எளிதாக உள்ளது. இது எனக்கு மீண்டும் பொருட்களை நிரப்புவது பற்றிய சரியான முடிவுகளை எடுக்கவும், மேலும் சரக்குகள் கடையில் இல்லாத நிலையை தவிர்க்கவும் உதவுகிறது. மேலும், நான் எங்கிருந்துவேண்டுமானாலும் பொருட்களின் விலையை மாற்ற எனக்கு Zakya உதவுகிறது. எங்கள் வணிகத்திற்கு Zakya மிகவும் முக்கியமானது."

சௌரவ் சதீஷ்இயக்குநர், Goodspice

நிறுவனம்

சவுரவ் சதீஷ் பெங்களூரில் உள்ள Spice Naturale Exim Pvt Ltd என்ற குடும்ப வணிகத்தின் மூன்றாம் தலைமுறை உரிமையாளர். சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சதீஷின் தாத்தாவால் துவங்கப்பட்ட இந்த business மசாலா மற்றும் உலர் பழங்களின் மொத்த விற்பனையில் நிபுணத்துவம் பெற்று Goodspice என்ற தனி brand ஆக உருவெடுத்துள்ளது. மசாலா மற்றும் உலர் பழங்களின் மொத்த விற்பனையுடன் சேர்த்து, பல்வேறு பாரம்பரியமிக்க சமையல் பொடிகளை உற்பத்தி செய்து, கர்நாடக மற்றும் ஆந்திர பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றது. 

சவால்

அறுபது ஆண்டுகளுக்கு மேல் செயலாற்றிவரும் Goodspice, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் சந்தை மாற்றங்களின் காரணமாக நவீன தீர்வைக் கோரும் பல செயல்பாட்டு சவால்களை எதிர்கொண்டது. ஒரு காலத்தில் தனிப்பயனாக்கப்பட்ட சேவையின் அடையாளமாக இருந்த கையால் எழுதப்பட்ட bills இப்பொது தாமதமான சேவைக்கு வழிவகுத்தது. எனவே வாடிக்கையாளர்களுக்கு சரியான மற்றும் சிறப்பான அனுபவத்தை வழங்க தொழில்நுட்பத்தை தங்கள் business - இல் செயல்படுத்த முடிவெடுத்தனர். 

"Zakya - விற்கு முன்பு, நாங்கள் நாங்கள் மற்ற POS software - களை பயன்படுத்தத் தொடங்கினோம், ஆனால் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மோசமாக இருந்தது, ஒரு சிறிய கோரிக்கையாக இருந்தாலும் அதற்கு தீர்வளிக்க அவர்களுக்கு சுமார் இரண்டு மாதங்கள் எடுத்தது. வாடிக்கையாளர் சேவை அவ்வளவு சிறப்பாக இல்லாதபோது, அந்த software - ஐ வாங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன்." 

சௌரவ் சதீஷ் இயக்குநர், Goodspice

இந்த சவால்களனைத்தும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர் சேவையில் அதிக தாமதங்களை ஏற்படுத்தியது. பில்லிங்கில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்வது மட்டுமல்லாமல், வணிகத்தில் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக ஒரு சரியான software Goodspice - க்கு தேவைப்பட்டது. 
 

தீர்வு

தங்கள் business - கான சிறந்த தீர்வை தேடும் முயற்சியில், Zakya POS - இன் அம்சங்களில் ஈர்க்கப்பட்டார் சதிஷ். கையேட்டில் இருந்து டிஜிட்டல் மற்றும் மொபைல் billing - ற்கு மாறியது, வாடிக்கையாளர் சேவையில் வேகம் மற்றும் துல்லியத்தை அளித்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாடிக்கையாளர் சேவையை கணிசமாக மேம்படுத்தியது. 
 

"ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கும் சில தனிப்பட்ட தேவைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஜவுளி உரிமையாளருக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கலாம், மசாலாப் பொருட்களை விற்பனை செய்பவருக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கலாம். ஒரு மென்பொருள் பல்வேறு வகையான வாடிக்கையாளர் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதில்தான் வெற்றி உள்ளது. Zakya team எனது business தேவை என்னவென்பதைப் புரிந்துகொண்டு, எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்."

சௌரவ் சதீஷ் இயக்குநர், Goodspice

"Zakya எங்கள் வணிகத்தின் மொத்த மற்றும் சில்லறை செயல்முறைகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற ஒரு நம்பகமான தளமாக மாறியது; எங்கள் வாடிக்கையாளர் ஏற்ப சிறந்த சேவையை வழங்க முடியும்" என்று சதீஷ் கூறினார்.

சந்தை விலைகளைப்பொறுத்து தினந்தோறும் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்யும் தேவை Goodspice - க்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் கடைக்கு சென்று பொறுங்கள் விலைகளை மாற்றியமைத்த சதிஷ் Zakya - உடன் விலை ஏற்ற இறக்கங்களைக் சுலபமாக கையாண்டு, எங்கிருந்தும் விலை மாற்றங்களைச் செய்ய உதவியது. கடையில் இருக்க வேண்டிய தேவையை முற்றிலும் நீக்கியது. வாடிக்கையாளர்கள் மொத்தமாகவோ அல்லது சிறிய அளவிலோ வாங்கும் அளவுகளின் அடிப்படையில் விலைகளை அறிமுகப்படுத்த உதவியது. வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த உதவியதுடன் சேர்த்து அதிகபட்ச லாபத்திற்கான விலை உத்திகளை அளித்தது.

பயன்கள்

கையால் எழுதப்பட்ட பில்லிங்கில் இருந்து Zakya - விற்கு மாறியதால் பில்லிங்கில் செலவிடும் நேரம் பாதியாக குறைந்தது. "Goodspice பயனுள்ள விற்பனை உத்திகளை செயல்படுத்த அதிக நேரத்தையும் ஆட்களையும் ஒதுக்க முடியும்" என்று சதீஷ் குறிப்பிட்டார். இந்த மாற்றம் Goodspice - இன் மீது வாடிக்கையாளர்கள் கொண்ட நம்பிக்கையை வளர்த்து ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த உதவியது. 


ஒவ்வொரு மதமும் எந்தெந்த பொருட்கள் விற்கப்படுகின்றன, எந்த அளவுகளில் விற்கப்படுகின்றன என்பதை அறிந்து விற்பனையை பகுப்பாய்வு செய்வதன் மூலம், விற்பனையை அதிகரிக்க முடிந்தது. இந்த data - வைக்கொண்டு சரக்குகளை விற்பனைக்கேற்ப கொள்முதல் செய்து பொருட்கள் வீணாவதால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவும், வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்து சரக்கு நிலைகளை திறம்பட மேம்படுத்தவும் Goodspice - துவங்கியது.

ஒரு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனமாக இருக்கும்பட்சத்தில், வாடிக்கையாளர் data - வை வாங்கி அதை உருவாக்குவது சவாலாக இருந்தது. இப்போது, Zakya அவர்களின் வாடிக்கையாளர் தரவை நிர்வகிக்க உதவுகிறது. வாடிக்கையாளர்களுடன் வலுவான உறவுகளை வளர்ப்பது மற்றும் விசுவாசத்தை ஊக்குவித்தல் போன்ற வாடிக்கையாளர் ஈடுபாடு முயற்சிகளுக்கு பெரும் உதவியாக அமைகிறது .

எதிர்பார்ப்புக்கள்

"எங்கள் business - ஐ வளர்ப்பதற்கு இப்போது எப்படி உதவுகிறதோ, அதே போல நீண்ட காலத்திற்கு Goodspice - க்கு Zakya தொடர்ந்து பலன் அளிக்கும் என்று நான் ஆழமாக நம்புகிறேன்," என்று சதீஷ் பகிர்ந்து கொண்டார்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்வதற்கான பெரிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், தொழில்நுட்ப அடிப்படையிலான சிறந்த மலிவான தீர்வான Zakya - வை பயன்படுத்துவது வெற்றியளிக்கும் என்று வலியுறுத்துகிறார். பல்வேறு அம்சங்களில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது business நிலையானதாக இருக்கவும், மாறிவரும் சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும் அவசியம் என்று சதீஷ் உறுதியாக நம்புகிறார்.

  • Industry typeவணிக விற்பனை
  • Employees1-10
  • Type of businessஇயற்கை அங்காடி
  • Previously Used Software
தனிப்பட்ட உதவி தேவையா?