நிறுவனம்
இந்திய ஆர்கானிக் துறையில் ஒரு முன்னோடியான business ஆக திகழும் Lumiere Organics, இந்த சமுதாயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்க உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் துவங்கப்பட்ட குடும்ப நிறுவனமாகும். 2002 ஆம் ஆண்டில் மஞ்சுநாத் என்பவர், மக்களுக்கு பாதுகாப்பான, சத்தான உணவை வழங்குவதற்கான ஒரு முயற்சியில் தன்னுடைய அதிக ஊதியம் ஈட்டும் IT துறை வேலையே ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பி இயற்கை விவசாயம் மற்றும் கலப்படமற்ற உணவுப்பொருட்களை தயாரிக்க Lumiere Organics என்ற நிறுவனத்தை துவங்கினர். தனது முதுகலைப் படிப்பை கனடாவில் முடித்து, மூன்று வருட பணிக் காலத்தைத் தொடர்ந்து லூமியர் ஆர்கானிக்ஸ் நிறுவனத்தில் தனது தந்தை மஞ்சுநாத்துடன் இணைந்த விஷ்ணு மஞ்சுநாத், இப்பொது Lumiere Organics - இன் பல்வேறு துறைகளுக்கு தலைமை தாங்குகிறார்.
Lumiere Organics - இல் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் தங்களுடைய சொந்த விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனோடு சேர்த்து உணவகங்கள், நிறுவங்களின் சிற்றுண்டிச்சாலைகள், ஆர்கானிக் பொருட்களுக்கான வர்த்தகம் மற்றும் ஆர்கானிக் பொருட்களை home டெலிவரி செய்வது என்று பல்வேறு பரிமாணங்களைக்கொண்டுள்ளது.
Retail பிரிவில், Lumiere Organics பெங்களுருவில் ஒரு அனுபவமிக்க கடையைக் கொண்டுள்ளது. பெங்களூரு முழுவதும் ஒரு மணிநேர விநியோகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தங்கள் பண்ணையில் மற்றும் விவசாய நிலங்களிலிருந்து இருந்து தினசரி அறுவடை செய்யப்படும் பழங்கள், மற்றும் காய்கறிகளைத்தவிர்த்து பருப்பு வகைகள், தானியங்கள், மரச்செக்கு எண்ணெய்கள், தினைகள் மற்றும் தின்பண்டங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் தங்கள் சொந்த உற்பத்தி நிலையங்களில் தயார் செய்கின்றனர்.
சவால்
விஷ்ணு Lumiere Organics நிறுவனத்தில் இணைந்தபோது, நடைமுறையில் உள்ள சவால்களான செயல்பாட்டுத் திறமையின்மை, inventory இல் உள்ள சிக்கல்கள் போன்ற பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வை தேடினார். தினசரி செயல்பாடுகளை திறம்பட சீரமைக்க முடியாமல், வணிகத்திற்கான தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளை நாடினார். இருப்பினும், அதனை தயாரித்து வழங்கிய நிறுவனம் சரியான ஆதரவு தராதது மற்றும் சிறிய மாற்றங்களுக்கு செய்யவேண்டிய அதிக செலவுகள் போன்ற காரணங்களால் இன்னும் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
விற்பனை, கணக்கியல் மற்றும் CRM உட்பட வணிகத்தில் உள்ள பல்வேறு துறைகளை தடையின்றி இணைக்கக்கூடிய Cloud மென்பொருள் அத்யாவசியமாக இருந்த நேரத்தில் Lumiere Organics நிறுவனத்திற்கு அறிமுகமானது Zakya.
தீர்வு
Lumiere Organics நிறுவனத்தின் accounting தேவைகளுக்காக Zoho Books - ஐ பயன்படுத்த துவங்கியபோது, அவர்களின் தேவைக்கேற்ப பல்வேறு துறைகளை இணைக்கக்கூடிய Cloud மென்பொருளான Zakya - வை கண்டுபிடித்தனர். Zakya - வின் அம்சங்கள் கற்றுக்கொள்வதற்கும், பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தது. அன்றாட செயல்பாடுகளை சிறந்த முறையில் செய்ய உதவிய Zakya எதிர்பார்ப்பை மிஞ்சிய அளவிற்கு Lumiere Organics - இன் வளர்ச்சிக்கு உதவியது.
Zakya - க்கு மாறுவது மிகவும் தடையற்ற முறையில் அமைந்தது. நாங்கள் எங்கள் Data - வைப் பதிவேற்றி உடனடியாக Zakya - வைப் பயன்படுத்தத் தொடங்கினோம். எனக்கு நினைவிருக்கும் வரை, எங்கள் ஊழியர்களுக்கு மென்பொருள் பயிற்சி அளிப்பதில் நாங்கள் எந்த நேரத்தையும் செலவிடவில்லை; கற்றல் வளைவு மிகவும் எளிமையானதாக அமைந்ததே இதற்கு காரணம். எங்கள் ஊழியர்கள், நேரடியாக கணினியில் Zakya பதிவேற்றிய 10-15 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு billing செய்ய தொடங்கினர்.
Zakya விரிவான தனிப்பயன்-கட்டமைக்கப்பட்ட அம்சங்களின் தேவையை முற்றிலுமாக நீக்கியது. வணிகத் தேவைகளுக்கு ஏற்ப விலைப்பட்டியல்களை எளிதாகப் பொருத்தவும், பணம் செலுத்துதல்களை நிர்வகிக்கவும் உதவியது.
பயன்கள்
தேவையற்ற பணிகளை நீக்குவதன் மூலமும், பல்வேறு செயல்முறைகளை automate செய்வதன் மூலமும், Lumiere Organics 30% குறைந்த பணியாளர்களைக்கொண்டு செயல்பாடுகளை இயக்க முடிந்தது.
"Zakya எங்களுடைய ஊழியர்களை 30% குறைக்க உதவியது. இதனால் விரிவாக்கம் தொடர்பான பணிகளுக்கு அந்த பணியாளர்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்" என்று விஷ்ணு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
Billing - இல் சேமிக்கப்படும் நேரம், பயிற்சிக்காக செலவழித்த நேரம் மற்றும் பணியாளர்கள் செய்யும் தேவையற்ற பணிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் Zakya நேரத்தை சேமிக்க உதவியது என்று விஷ்ணு பகிர்ந்துகொண்டார்.
எனது முந்தைய தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருளில் சிறிய மாற்றங்களுக்காக நிறைய நேரத்தையும் பணத்தையும் செலவிட வேண்டியிருந்தது. ஆனால் Zakya ஏற்கனவே Retail business - ற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இதனால் எந்த தனிப்பயனாக்கலும் தேவையில்லை, நாங்கள் உடனடியாக Zakya - வைப் பயன்படுத்தத் தொடங்கினோம்.
Zakya - க்கு முன் நாங்கள் பயன்படுத்திய மென்பொருளின் மாதாந்திர செலவுகள் சுமார் ரூ. 15,000 ஆகிவிடும். Zakya மாதம் ரூ. 1,000 திற்கும் குறைவான செலவில் அணைத்து அம்சங்களையும் வழங்கி வருகிறது. இந்த மாற்றத்தால் நாங்கள் செலவுகளைச் சேமித்தது மட்டுமல்லாமல், அதிக security கொண்ட மென்பொருளை பயன்படுத்துகிறோம் என்ற மனத்திருப்தி உள்ளது", என்றார் விஷ்ணு.
எதிர்பார்ப்புக்கள்
Organic துறையில் இருப்பது ஆண்டு கால அனுபவத்துடன், Lumiere Organics தனது business - ஐ விரிவுபடுத்தியுள்ளது. Retail விற்பனையைத்தவிர்த்து B2B, IT நிறுவங்களின் உணவகங்கள், மற்றும் MNC - களுக்கான உணவு சேவைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. Zakya - வை சில்லறை விற்பனைக்காக மட்டும் பயன்படுத்தாமல் கார்பொரேட் பில்லிங் - காக பயன்படுத்துகிறது. மேலும் Zakya - வைக்கொண்டு பல்வேறு நகரங்களுக்கு மேலும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது Lumiere.
- Industry typeரீடெயில்
- Employees1-10 ஊழியர்கள்
- Type of businessஇயற்கை அங்காடி
- Previously Used Software