மகிழ்ச்சியான செல்லப்பிராணிகளை உருவாக்க Oh My Dawg - இன் Zakya - உடனான பயணம்

முதல்முறை தொழில் முதலாளியாக இருப்பதால், எனது வியாபாரத்தின் ஒரு பகுதியாக நான் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றேன். Zakya-வின் நேரடி கண்காணிப்பு திறன்கள் எனக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றன. பில்களை சிறிது நேரம் hold செய்வது போன்ற அம்சங்களுடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர் சேவையை மிகவும் மேம்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை போன்ற சேவைகளை பெறும்போது முனைப்பான பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துகின்றோம்.

சினேகாநிறுவனர், Oh My Dawg.

The company

Oh My Dawg செல்லப்பிராணிகளுக்கான ஒரு கடையாக மட்டுமே இல்லாமல், அவைகளின் பிடித்தமான ஒரு கனவு இடமாகவே திகழ்கின்றது. Whisper Bark என்ற நிறுவனத்தின் கீழ்  Oh My Dawg என்ற செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய அனுபவ மையத்தை தொடங்கினார், சினேகா. Corporate துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த சினேகா, செல்லப்பிராணிகள் மீது தான் கொண்ட அன்பிற்கிணங்க, இந்த மையத்தை தொடங்க விரும்பினார். மிகச் சிறந்த வகையில் செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள்,  நன்கு வடிவமைக்கப்பட்ட புகைப்பட கூடம், கால்நடை மருத்துவ சேவைகள், என அனைத்தையும் ஒரே இடத்தில் Oh My Dawg வழங்குகிறது.

Oh My Dawg அனைத்து வகையான செல்லப்பிராணிகளையும் ஒன்றுபோல் நடத்துவதை ஊக்குவிக்கின்றது. இனத்தை பொறுத்து வேறுபாடுகள் காட்டாமல் அனைத்துக்கும் சமமான வகையில் சேவைகளை வழங்கியும் வருகின்றது. Oh My Dawg செல்லப்பிராணிகள் மீது கொண்ட அக்கறையின் பொருட்டு மாதந்தோறும் நாய்கள் மற்றும் பூனைகளை தத்தெடுக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து, செல்லப்பிராணிகளை அவற்றின் பிரியர்களிடம் சேர்கின்றது. ஒரு பாதுகாப்பான அன்பான இல்லத்தில் வளரும் வாய்ப்பையும் இந்த முயற்சி ஏற்படுத்தி தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சவால்கள்

ஆரம்பத்தில் குறைவான வகை பொருட்களை கொண்டு ஆரம்பித்த Oh My Dawg, கைமுறை பில்லிங்கில் தொடங்கிய சில நாட்களிலேயே டிஜிட்டலாக தங்கள் business operations - ஐ எடுத்துச்செல்லவேண்டிய கட்டாயத்தை உணரத்தொடங்கியது. பில்லிங் முதல், வாடிக்கையாளர்களை குறித்த தகவல்கள், மற்றும் சரக்குகளைக்குறித்த விவரங்கள் என business - இன் அனைத்து அம்சங்களையும் ஒரே இடத்திலிருந்து இயக்க தேவையான software - ஐ தேடும் பணியில் Oh My Dawg இறங்கவேண்டியிருந்தது.

தீர்வு

பல்வேறு software - களை கண்டறிந்த பின்னும் Oh My Dawg - க்கு ஏற்ற சரியான software - கான தேடல் தொடர்ந்தது. இந்தத்தேடல் Zakya - வை சினேகாவிற்கு அறிமுகப்படுத்தியது. Zakya தன்னுடைய business - இன் தேவைகள் மற்றும் சவால்களை சரிசெய்யக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதால் சினேகா உடனே  Zakya - வின் support team உதவியுடன் demo - வின் மூலம் software - ஐ நன்கு அறிந்துகொண்டார்.

மேலும் Zakya - இன் மாதாந்திர கட்டண சந்தா திட்டம் புதிய startup ஆன Oh My Dawg - க்கு உதவியாக அமைந்தது. Zakya - வின் எளிமையான அம்சங்களை பயன்படுத்தி அறிந்துகொண்டவுடன் உடனடியாக தங்கள் business சரக்குகளை inward செய்து பில்லிங்கை துவங்கியது Oh My Dawg.

Zakya - வின் customer support team அழைப்பு அல்லது WhatsApp மூலம் வழங்கிய  உடனடி தீர்வுகள், விரிவாக்க முயற்சிகளின் போது ஏற்பட்ட சந்தேகளுக்கான சிறந்த வழிகாட்டுதல் போன்றவை Oh My Dawg - இன் வளர்ச்சியில் Zakya - வின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன.

"The onboarding process with Zakya was incredibly simple and intuitive. Every feature was easy to understand, and both myself and my staff quickly adapted to using it. The user interface is very friendly, with all the features conveniently grouped together on the same page, making our learning experience seamless and efficient. My favorite is the billing part, which provides a seamless checkout experience by presenting all relevant details clearly and concisely on a single screen."

SnehaFounder, Oh My Dawg

பயன்கள்

சினேகா தொலைதூர பயணம் அல்லது business சந்திப்புக்களில் கலந்துகொள்ளும் போது, தன்னுடைய பிசினஸ் - ஐ மேற்பார்வையிட்டு சரியான முடிவுகளை எடுக்க Zakya உதவியது.

I am not regularly in the store as I travel frequently for business meetings. I also [currently] stay at home at times to take care of my nine-month old puppy. However, Zakya helps me access critical information such as customer transactions and purchase trends regularly even without being in the store. The daily alerts that Zakya sends me through email, whenever stock levels fall below a specified threshold, helps me take immediate action to replenish inventory and prevent stockouts.

SnehaFounder, Oh My Dawg

பொருட்களின் விற்பனையை ஆய்வு செய்வதன் மூலம், அதிகம் விற்பனையாகும் பொருட்களை அறிந்துகொண்டு, தயாரிப்பு மற்றும் கொள்முதல் பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் முடிந்தது. இந்த அணுகுமுறை Oh My Dawg - இன் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை திறம்பட சந்திக்க உதவியது.

"Customer பொருட்களை பில்லிங் செய்யும்பொழுது வேறேதும் பொருளோ, இல்லை கால்நடை மருத்துவ சேவைகளோ தேவைப்பட்டால் அந்த பில் - ஐ hold செய்யும் option எங்கள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த உதவுகிறது. Customer - களைப் பற்றிய அத்தியாவசியத் தகவல்களை Zakya மூலமாக பெறுவது, அவர்களின் விருப்பங்களைப் பொறுத்து purchase செய்ய அடித்தளமாக செயல்படுகிறது", என்று பகிர்ந்து கொண்டார் சினேகா.

Looking forward

"முதல் முறை தொழில்முனைவோராக இருக்கும்போது, தொழில்நுட்பத்தை business - இல் செயல்படுத்துவது மிகவும் அவசியமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். எங்களைப் போன்ற செல்லப்பிராணிகள் அனுபவ மையத்திற்கு அதுவே அடித்தளமாக இருந்தது. நாங்கள் புதிய பிராண்டுகள், பொருட்கள் மற்றும் எங்கள் சொந்த brand பொருட்களை வரும்நாட்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். Zakya - இன் அம்சங்கள் மற்றும் சிறந்த சேவைகள் மூலம், எங்கள் sales - ஐ அதிகரிக்கவும், திருப்திகரமான customer - களை உருவாக்கவும் எங்களால் முடியுமென நம்புகின்றோம். Zakya - வுடன் சேர்ந்து வளர்ந்து, அதிக செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவோம்", என்றார் சினேகா.

  • Industry typeரீடெயில்
  • Employees1 - 10 ஊழியர்கள்
  • Type of businessசெல்லப்பிராணிகள் கடை
  • Previously Used Software
தனிப்பட்ட உதவி தேவையா?