Zakya - உடன் பல விற்பனை நிலையங்களைக்கொண்ட பொம்மை கடையாக மாறிய Snuggles

Zakya வீட்டில் இருந்தபடியே என்னுடைய business - உடன் இணைந்திருக்கவும், சிரமமின்றி நிர்வகிக்கவும், எனது ஊழியர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஒரே click - இல் எங்களுடைய branch - களில் நடக்கும் நிகழ்நேர விற்பனை மற்றும் சரக்கு தேவைகளை என்னால் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்ற முடிகின்றது.

நந்தினிநிறுவனர், Snuggles

நிறுவனம்

My Plush Toy Pvt Ltd, மென்மையான பொம்மைகளை தயாரிக்கும் அமெரிக்காவில் இயங்கும் இந்திய நிறுவனமாகும். இந்தியாவில் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தை முதன்மைப்படுத்தி, இந்தியாவில் கிடைக்கும் மூலப்பொருட்களைக்கொண்டு பொம்மைகளை தயாரிக்க வேண்டும் என்னும் சீரிய எண்ணம் Snuggles என்னும் புதிய பிராண்ட் - ஐ உருவாக்க காரணமாக அமைந்தது. My Plush டாய் - ஐ தாய் நிறுவனமாகக்கொண்ட Snuggles இந்திய வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக பெங்களுருவில் துவங்கப்பட்டது.

தனித்துவமான கணக்கற்ற பொம்மைகளை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், மலிவான விலையில் தரமான பொம்மைகளை தயாரித்து எல்லா தரப்பான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை  தங்களின் கொள்கையாக கொண்டுள்ளது Snuggles Snuggles - இன் தனித்துவமிக்க வடிவமைப்புகளைத்தவிர்த்து, குழந்தைகளின் ஓவியங்கள், ஏன் கிறுக்கல்களைக்கூட பொம்மைகளாக  உருவாக்குவதில் சிறந்தவர்கள் இவர்களின் திறமைமிக்க வடிவமைப்பாளர்கள். ஒவ்வொரு படைப்பும் சிறந்ததாகவும், குழந்தைகளுக்கு பிடித்ததகவும் அமையவேண்டுமென்று பல்வேறு முயற்சிகளை எடுத்து, வெற்றியும் கண்டுள்ளனர்.

சவால்

Snuggles முதலில் தங்களுடைய POS மற்றும் e-commerce செயல்பாடுகளுக்காக Shopify-ஐ தேர்ந்தெடுத்தனர். POS சிஸ்டம் மற்றும் பிரிண்டர் இடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்பு பிரச்சினைகள், சரக்கு மேலாண்மை பிரச்சினைகள், மாற்றத்திற்கான தேவையை வலுப்படுத்தியது. மேலும் Shopify Support team - இன் ஆதரவை வேண்டி சின்ன பிரச்னைகளுக்குக்கூட நெடுநேரம் காத்திருக்கும்படியான சூழல் ஒரு புதிய பிராண்ட் ஆன Snuggles - க்கு மிகவும் சவாலாக அமைந்தது.

இதனால் உற்பத்தியை திட்டமிடுவது, சரக்குகளை ஒருங்கிணைப்பது, போன்ற செயல்பாடுகள் பாரமாகவும், அதிக நேரம் மற்றும் ஆட்களின் தேவையை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. இச்சவால்களால் ஏற்பட்ட தேடலில் Zakya - வை தெரிந்துகொண்டனர்.

தீர்வு

ஆரம்பத்தில் Zoho நிறுவனத்தின் பிராண்ட் என்பதனால் Zakya - வை தேர்வு செய்யலாம் என்று நினைத்தபோதும், Zakya - வின் அம்சங்கள் அனைத்தும் அவர்களின் business வளர்ச்சிக்கு ஏற்ற software - ஆக தோன்றியது. ஒரே நாளில் Shopify - யிலிருந்து Zakya - விற்கு மாறும் அளவிற்கு எளிமையாகவும் அமைந்தது. Zakya - உடன் தங்களின் மொத சரக்கு மேலாண்மையையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், நான்கு பேர் வேலைசெய்த இடத்தில் ஒருவரைக்கொண்டு அதே வேலையை சுலபமாக செய்ய முடிந்தது. இதனால் பல வகைகளில் செலவினத்தை குறைக்கவும் அதே ஆட்களை கொண்டு மற்ற விரிவாக்க பணிகளை செய்யவும் முடிந்தது.

எந்த வகை பொம்மைகள் வேகமாக நகருகின்றன என்பதை Zakya - வின் மூலம் அறிந்துகொண்டு அதைப்பொறுத்து அவர்களின் உற்பத்தியை சரியாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவும் திட்டமிட்டு, விற்பனை முன்னேற்றத்தை கண்கூடாக கண்டனர். அதேபோல், எந்த பொம்மைகள் நகரவில்லையோ அவைகளை தர்காலிகமாக உற்பத்தி செய்யாமலிருக்கவோ, அல்ல வேறேதும் மாற்றங்களை கொண்டுவரவோ உதவியாக இருந்தது.

மேலும், Zakya - வின் பல கடைகளை ஒருங்கிணைக்க உதவிய அம்சங்கள் ஒரே இடத்திலிருந்து வெவ்வேறு இடங்களில் நடக்கும் செயல்பாடுகளை அறிந்துகொள்ள உதவியது.

பயன்கள்

ஒரு வயது குழந்தையுடன், தினமும் கடைக்குச் செல்வது நந்தினிக்கு மிக சவாலானதாகவும் நடைமுறையில் கடினமானதாகவும் அமைந்தது. "Zakya எனக்கு வழங்கிய work-life balance எனது ஒரு வயது குழந்தையை நான் கவனித்துக் கொள்ள மிக உதவியாக இருக்கின்றது. வீட்டில் இருந்தபடியே என்னுடைய business - உடன் இணைந்திருக்கவும், சிரமமின்றி நிர்வகிக்கவும், எனது ஊழியர்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் ஒரே click - இல் எங்களுடைய branch - களில் நடக்கும் நிகழ்நேர விற்பனை மற்றும் சரக்கு தேவைகளை என்னால் அறிந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்ற முடிகின்றது," என்று கூறினார் நந்தினி.

மேலும், மற்ற POS solution - களுடன் ஒப்பிடும்போது மலிவான விலையில் கிடைக்கும் வலுவான அம்சங்களை அவர்களின் business - ற்கு சிறந்த தீர்வாக அமைந்தது.

"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் Retail சந்தையில் ஏற்படும் தொடர் மாற்றங்களால், எங்களைப்போன்ற சில்லறை விற்பனையாளர்களுக்கு நம்பகமான software மிக அத்தியாவசியமாக மாறிவிட்டது. Zakya எங்களுக்கு சிறந்த அம்சங்களைத்தாண்டி, நல்ல ஆதரவையும் வழங்கியது. ஒரே ஒரு Phone call அல்லது message - இல் எங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. Zakya குழுவிற்கு எங்கள் நன்றிகள், Zakya - வை தேர்தெடுத்ததால் எங்கள் business வளர்ச்சி எளிதாக அமைந்தது."

கிருஷ்ண சைதன்யாநிர்வாக இயக்குனர், Snuggles
  • Industry typeரீடெயில்
  • Employees11-50 ஊழியர்கள்
  • Type of businessபொம்மைக்கடை
  • Previously Used Software

எதிர்பார்ப்புக்கள்

"Zakya எங்கள் business - இன் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. Zakya பெற்றுள்ள உயர்தர தயாரிப்பு தரம் மற்றும் எங்களுக்கு அளிக்கும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றுடன், எதிர்காலத்தில் வேறு எந்த software எங்களுக்கு தேவைப்படாது என்பதில் சந்தேகமில்லை. இப்பொது இருப்பதைவிட எங்கள் business பத்து மடங்கு வளர்ந்தாலும் நாங்கள் Zakya - வின் வாடிக்கையாளராக இருக்கும் அணுகுகில்ஸ்," என்று சந்தோஷமாக விடைபெற்றார் நந்தினி.

தனிப்பட்ட உதவி தேவையா?