WE Mart செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி, Zakya உடன் விரிவாக்கத்தை நோக்கி நகர்கிறது

Zakya காகிதமற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் மட்டும் டிஜிட்டல் மயமாக்கலை எளிதாக்க உதவவில்லை, உரிமையாளர் இல்லாமல் தொழிலை நடத்துவதற்கும் பங்களித்துள்ளது. இப்போது, என் தொழில் என்னை மட்டும் சார்ந்து இல்லை. எங்கள் முதல் கடையை நிறுவிய முதல் ஒன்றரை மாதங்களுக்குள், month-on-month வருவாயில், வியக்கவைக்கும் 500% அதிகரிப்பைக் காண முடிந்தது, இப்போது நாங்கள் எங்கள் இரண்டாவது கடையையும் திறந்துள்ளோம்.

சுபாஷினிஇணை நிறுவனர், WE Mart

நிறுவனம் பற்றி

Wanaw Enterprises-ன் WE Mart என்பது கிராமப்புற மக்களுக்குச் சிறந்த விலையில் தரம் நிறைந்த புதிய பொருட்களை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பல மினி-சூப்பர்மார்க்கெட்களின் கலவையாகும். WE Mart பாரம்பரிய single store அமைப்பில் இருந்து வேறுபற்று, தனித்துவமான Hub and spoke modelல் இயங்குகிறது. Hub store விற்பனை அதிகம் நடக்கும் ஒரு மையப்பகுதியில் அமைந்துள்ளதால், அது அந்த இடத்தின் முதன்மை கடையாகச் செயல்படுகிறது. Spoke stores, hub store-ன் எல்லையளவை அருகிலுள்ள கிராமங்களுக்கு விரிவுபடுத்துவதால், இது 10க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் கிராமப்புற மக்களுக்கு accessibility-யை உறுதி செய்கிறது.

தற்போது, Hub store நான்கு ஊழியர்களுடன் செயல்பாட்டில் உள்ளது, மேலும் அவர்கள் தங்கள் விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக தங்கள் spoke store-களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். WE Mart தனது அடுத்த spoke store-யை ஜனவரி 2024-ல் திறந்துள்ளது, இது கிராமப்புற சமூகங்களின் வீட்டு வாசலில் தரமான பொருட்கள் மற்றும் தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தைக் கொண்டு வருவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மேலும் மேம்படுத்துகிறது. கிராமப்புறங்களில் retail landscape-யை மாற்றியமைப்பதன் மூலமும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதே நிறுவனத்தின் குறிக்கோள். இருப்பினும், அவர்களின் அர்ப்பணிப்பு வணிகத்திற்கு அப்பாற்பட்டது. முழு WE Mart அமைப்பும் அதன் நிறுவனர் முதல் ஊழியர்கள் வரை பெண்களால் இயக்கப்படுகிறது. WE Martல் உள்ள WE, Wanaw Enterprises மூலம் Women Empowerment அளிப்பதைக் குறிக்கிறது. அவர்கள் retail துறையில் பெண்களின் பங்கை உயர்த்துவதற்கும், மேலும் inclusive மற்றும் துடிப்பான கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பதற்கும், கிராமப்புற சமூகங்களில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

எதிர்கொள்ளும் சவால்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் துல்லியமான திட்டமிடலுக்காக, நிறுவனர்கள் தங்கள் hub and spoke supermarkets முழுவதும் அனைத்து செயல்பாடுகளையும் தடையின்றி டிஜிட்டல் மயமாக்கும் திறன் கொண்ட ஒரு தொழில்நுட்ப partner-யைத் தேடினர். டிஜிட்டல் மயமாக்க மற்றும் கிராமப்புற சந்தையில் வாடிக்கையாளர் சேவைக்கான புதிய standards-யை அடைய முடிவு செய்த பிறகு, முதல் நாளிலிருந்தே manual operationகளைத் தவிர்ப்பதை உறுதியாகக் கொண்டனர்.

தீவிர பயிற்சி அல்லது திறன்கள் இல்லாமல், எவரும் பயன்படுத்தக்கூடிய, செயல்பாட்டுத் திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்கின்ற, எளிதான தீர்வை, அவர்கள் நாடினர். அவர்களின் தேடலின் போது, அவர்கள் Zakya-வைக் கண்டுபிடித்தனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய, user-friendliness மற்றும்  தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்கள் கொண்ட Zakya-வைக்  கண்டு ஈர்க்கப்பட்டனர்.

சவாலுக்கான தீர்வு

உள்ளூரில் கிடைக்கும் பல்வேறு software-க்கு இடையில் Zakya-வை தேர்ந்தெடுக்கும் முடிவு, WE Mart-ன் வணிகத் தேவைகளின் அடிப்படையில் அத்தியாவசிய elements-களை  தடையின்றி ஒருங்கிணைத்த Zakya-ன் இணக்கமான அம்சங்களால் இயக்கப்பட்டது.

"நாங்கள் Zakya demo-வைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, அதன் user friendliness தனித்து நின்றது. நாங்கள் தேடும் அம்சங்களுக்கும் மேலாக customized discounts, schemes மற்றும் referral programs போன்ற அதிகமான அம்சங்களை வழங்குவதன் மூலம் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மேலாகப் பூர்த்தி செய்தது" என்று கூறினார் WE Mart-ன் இணை நிறுவனர் சுபாஷினி.

எங்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், Zakya-க்கு முன் நாங்கள் முயற்சித்த மற்ற software-களில், இந்த அம்சங்கள் அனைத்தும் தனித்தனி add-ons ஆக வந்தன. ஆனால், Zakya அதன் முக்கிய கட்டமைப்பிற்குள் ஒரு முழுமையான தீர்வை வழங்கியது. மேலும் integrations-ல் நாங்கள் நிறைய சேமித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."

பில்லிங் தவிர, WE Mart Zakya-வை விரைவாகத் தேர்ந்தெடுக்கக் கட்டாயக் காரணங்கள் இருந்தன. கொள்முதல் பில்களை நிர்வகித்தல், GST செலுத்துதல்களைக் கண்காணித்தல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முழுத்தொகையை வழங்குதல் போன்ற கொள்முதல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதில் இருந்த நிபுணத்துவம் காரணமாக, இது மனித தலையீட்டின் அவசியத்தைக் கணிசமாகக் குறைத்தது. குறிப்பிடத்தக்க வகையில், overdue payments-களைத் தானாகக் கண்டறியும் திறன் கூடுதல் வசதியைச் சேர்த்தது, ஒட்டுமொத்த செயல்பாட்டு மென்மையையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது.

பயன்கள் மற்றும் ROI

WE Mart, அவர்களின் அனைத்து பொருட்களுக்கும் barcode scanning-ஐ செயல்படுத்துவதன் மூலம் அதிவேக billing-ஐ அடைய முடிந்தது.

சரியான நேரத்தில் purchase order-களை அனுப்புவது மற்றும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி சரக்கினை தேவையான அளவு வைத்திருப்பது போன்ற எங்களின் அனைத்து தேவைகளையும் Zakya தடையின்றி நிவர்த்தி செய்தது. Marginல் சமரசம் செய்யாமல் விலையை நிர்ணயிப்பது, மற்றும் customized discounts வழங்குவதன் மூலம்,  வாடிக்கையாளர்களை திறம்பட ஈர்ப்பதற்கும் மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கும் உதவுவதில் சிறந்து விளங்குகிறது.

சுபாஷினிஇணை நிறுவனர், WE Mart

வாடிக்கையாளர்களுக்குத் தரமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கியதன் மூலம் அவர்களை மீண்டும் கடைக்குச் செய்ததால், வாடிக்கையாளர் வருகையில் பெரும் அதிகரிப்பைக் காண முடிந்தது. Zakya மூலம் அவர்களின் hub store நிறுவப்பட்ட முதல் இரண்டு மாதங்களுக்குள், month-on-month வருவாயில் 500% அதிகரிப்பைக் காண முடிந்தது.

மேலும், WE Mart Zoho Books-ஐ அவர்களின் அனைத்து accounting தேவைகளுக்கும் பயன்படுத்துகிறது, இது Zakya உடன் எளிதாக integrate செய்யப்படுகிறது. "Zoho Books உடன் Zakya-வின் integration, தனி ஆடிட்டர் கொண்டிருக்க வேண்டும் என்ற எங்கள் தேவையை நீக்கியது; Ledger-களை உருவாக்குவது முதல் GST-யை தாக்கல் செய்வது வரையிலான அனைத்து filing process-களையும் நானே செய்கிறேன், ஏனெனில் Zakya எல்லாவற்றையும் ஒரே சுற்றுச்சூழலுக்குள் தடையின்றி நடத்த வழிவகுக்கிறது" எனக் கூறினார் சுபாஷினி.

நாங்கள் எதிர்நோக்குவது

"சரியான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கான எங்கள் சாமர்த்தியமான முடிவு, கிராமப்புற சமூகத்திற்குத் தரம் நிறைந்த மற்றும் செலவு குறைந்த பொருட்களை வழங்க வேண்டும் என்ற நிறுவனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற அடித்தளத்தை அமைத்தது. அதே நேரத்தில் நகர்ப்புற விற்பனையாளர்களுக்கு இணையாக ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்தது. WE Mart மொபைல் அடிப்படையிலான பில்லிங் மற்றும் ஆன்லைன் ஆர்டர் மூலம் டிஜிட்டல் தீர்வுகளைத் தழுவி வருகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதியை தருவது மட்டுமல்லாமல், கிராமப்புற retail வர்த்தகத்தை டிஜிட்டல் யுகத்திற்குக் கொண்டு வருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் குறிக்கிறது" என்று சுபாஷினி முடித்தார்.

WE Mart-ன் செயல்பாட்டுத் திறன், செலவு மேலாண்மை மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றில் Zakya ஏற்படுத்திய மாற்றத்தக்கத் தாக்கம், பல்வேறு கிராமங்களை hub உடன் இணைக்கும் spoke store-களைத் திறப்பது, மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஒரே தளத்தில் நிர்வகிப்பதற்கான அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்த உதவுகிறது.

Zakya என்னைச் சார்ந்திருக்காமல் வணிகத்தைத் தொடர்ந்து நடத்துகிறது, மேலும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் எனது கடையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. இப்போது, தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த எனக்கு அதிக நேரம் இருக்கிறது; இது  Zakya செயல்படுத்தப்பட்ட முதல் சில மாதங்களிலேயே எங்களின் அடுத்த கடையை திறக்க உதவியது.

சுபாஷினிஇணை நிறுவனர், WE Mart
  • Industry typeRetail
  • Employees1 - 10 ஊழியர்கள்
  • Type of businessசூப்பர்மார்க்கெட்
  • Previously Used Software

Features that helped us

Price listMulti-outlet managementEasy integrations
தனிப்பட்ட உதவி தேவையா?