பார்வையை ஈர்க்கும் இணையதளத்தை உருவாக்குங்கள்
உங்கள் வணிகத்திற்கான ஆன்லைன் ஸ்டோரை எளிதான இணையதள உருவாக்கும் தளம் மற்றும் பலவிதமான டெம்ப்ளேட்கள் கொண்டு சில நிமிடங்களில் உருவாக்குங்கள்.
எளிதாக எந்த பகுதியையும் இழுத்து நமக்கு ஏற்றது போல வைத்து இணையதளத்தை உருவாக்குங்கள்.
இணையதளத்தை உருவாக்க உங்களுக்கு எந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் தேவையில்லை, உங்களின் அனைத்து பொருட்களையும் கொண்ட இணையதளத்தை உருவாக்க உறுப்புகள் மற்றும் பிரிவுகளை இழுத்து நமக்கு ஏற்றது போல வைத்திடுங்கள். உங்கள் இணையதளத்தில் உள்ள ஐகான்கள், பேனர்கள் மற்றும் பிற உறுப்புகளின் அளவை எளிதாகத் தனிப்பயனாக்கலாம்.
முன்பே கட்டமைக்கப்பட்ட templates
20+ prebuilt templates-ல் இருந்து தேர்வு செய்து சில நிமிடங்களில் உங்கள் இணையதளத்தை உருவாக்குங்கள். உங்கள் விருப்பப்படி வண்ணங்கள் மற்றும் எழுத்துரு அளவுகளைத் திருத்துவதன் மூலம் டெம்ப்ளேட்களின் தோற்றத்தையும் உணர்வையும் தனிப்பயனாக்குங்கள்.
எளிதான சரக்கை மேலாண்மை
உங்கள் ஆன்லைன் சரக்குகளை எளிதாக அமைத்திருங்கள். பொருட்களைச் சேருங்கள், வாடிக்கையாளர்கள் பட்டியல்களை விருப்பத்திற்கேற்ப வடிகட்ட அனுமதியுங்கள், கொள்முதல் வரம்புகளை அமைத்திருங்கள் மற்றும் இன்னும் பல அம்சங்கள்.
பொருட்களைச் சேர்த்தல் மற்றும் நிர்வகித்தல்
உங்கள் பொருட்களை அவற்றின் பெயர், விளக்கம், SKU, விலை மற்றும் பிற விவரங்களுடன் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு இறக்குமதி செய்யுங்கள்; நீங்கள் அவற்றை மொத்தமாகக் கூட சேர்க்கலாம். நீங்கள் வெவ்வேறு விலைகளுடன் பொருட்களின் மாறுபாடுகளை உருவாக்கலாம் மற்றும் வெவ்வேறு பொருட்களை ஒன்றாகத் தொகுத்து கிட்களை உருவாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
வாடிக்கையாளர்களை விருப்பமான பொருட்களை வடிகட்ட அனுமதியுங்கள்
Filters மூலம் உங்கள் சரக்குகளை எளிதாகத் தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவுங்கள். வாடிக்கையாளர்கள் பொருட்களை மிகவும் வசதியாகக் கண்டறிய பண்புக்கூறுகள், விவரக்குறிப்புகள், குறிச்சொற்கள், பிராண்டுகள் மற்றும் விலைகளின் அடிப்படையில் பொருட்களை வடிகட்டலாம்.
நிகழ்நேர சரக்கு இருப்பை உறுதிப்படுத்துங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் எப்போதும் உங்கள் கடையின் சரக்கு இருப்புடன் ஒத்திசைக்கப்படுவதால், நீங்கள் சரியான இருப்பு நிலைகளைப் பராமரிக்கலாம் மற்றும் கையிருப்பில் இல்லாத பொருட்களைச் செயலாற்ற பொருட்களாய் குறிக்கலாம்.
கொள்முதல் வரம்புகளை அமைத்துடுங்கள்
அதிகம் விற்பனையாகும் பொருட்களை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வாங்குவதிலிருந்து வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துங்கள். அதன் மூலம் பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு இடையே நியாயமான விநியோகம் இருப்பதாய் உறுதிசெய்யுங்கள்.
வாடிக்கையாளர்களுக்கு மதிப்பை வழங்குங்கள்
ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் பொருட்களை சேர்த்திருங்கள், தள்ளுபடிகளை அமைத்திருங்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் உங்களுடன் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது அவர்களுக்கு வசதியை வழங்குங்கள்.
ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்
RazorPay, PayU, ICICI Bank Eazypay மற்றும் பல பிரபலமான கட்டண நுழைவாயில்களுடன் இணைத்து, பாதுகாப்பாகப் பணப் பரிவர்த்தனையை உறுதியாக்கிடுங்கள்.
வாடிக்கையாளர் ஆர்டர்களை எளிதாகப் பூர்த்திசெய்யுங்கள்
Shipway, Aftership, மற்றும் Shiprocket போன்ற பிரபலமான ஷிப்பிங் கேரியர்களுடன் இணைந்து வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்குப் பொருட்களை வழங்கிடுங்கள் மற்றும் அவற்றின் நிகழ்கால நிலையை கண்காணித்துடுங்கள். வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஆர்டர்களை உங்கள் கடையிலிருந்து நேரடியாகப் பெறுவதற்கான வசதியை வழங்குங்கள்.
தள்ளுபடிகள் மற்றும் கூப்பன்களை அமைத்திடுங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள பொருட்களுக்கு Flat மற்றும் Discount அடிப்படையிலான தள்ளுபடிகளை அமைத்திடுங்கள். வாடிக்கையாளர்கள் செக் அவுட்டின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் அல்லது ஒட்டுமொத்த கொள்முதல் மதிப்பின் மீது காலாவதி தேதிக் கொண்ட தள்ளுபடியைப் பெற கூப்பன்களை உருவாக்கி அதன் வாயிலாக விற்பனையை மேம்படுத்துங்கள்.

சமூக ஊடகங்களில் விற்பனை செய்யுங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரை சமூக ஊடகத்துடன் இணைத்து பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு விற்றிடுங்கள். Instagram மற்றும் Facebook இல் கடைகளை அமைத்து, உங்கள் சரக்குகளை அங்குக் காண்பித்து, ஆர்டர்களை எடுங்கள்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பயனர்களை நிர்வகியுங்கள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான வெவ்வேறு பயனர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துங்கள். நிர்வாகிகள், ஊழியர்கள், போன்ற பல்வேறு அணுகல் நிலைகளை நீங்கள் அமைத்திருங்கள். ஒவ்வொரு பயனருக்கும் சலுகைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்திடுங்கள்.
