உங்கள் Zakya Jumpstart திட்டத்தை இன்றே செயலாக்கிடுங்கள்
நீங்கள் உடனடியாக Zakyaஇலிருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்காக—Zakya Jumpstart மூலம், உங்கள் சரக்கு இருப்புகளை அமைத்திடவும், உங்கள் பில்லிங் அமைப்புகளைத் தயார் செய்திடவும் மற்றும் அனைத்துப் பயனர்களையும் ஆன்போர்டு செய்திடவும்—எங்கள் வல்லுநர்கள் மெய்நிகர் முறையிலோ அல்லது ஸ்டோருக்கு நேரடியாக வருவதன் மூலமாகவோ உதவுவார்கள். Zakya Jumpstart திட்டத்தில் இணைவதற்கு இன்றே பதிவு செய்திடுங்கள்.
அது எவ்வாறு செயல்படுகிறது?
Zakya செயல்படுத்துதலின் படிநிலைகளைக் கற்றுக்கொண்டு, திட்டத்தின் முழுப் பலனையும் பெறுங்கள்.
இதில் அடங்குபவை யாவை?
**இந்த விலையிடலானது மெய்நிகர் அமர்வுகளுக்கான பிரத்யேகச் செயலாக்க நிபுணருக்கானது. நேரடி அமர்வுகளுக்கு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பாருங்கள்.
**கூடுதல் நேரத்துக்குக் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
**குறிப்பிடப்பட்ட விலைகளுடன் கூடுதலாக உள்ளூர் வரிகள் (VAT, GST போன்றவை) விதிக்கப்படும்.
கூடுதல் ஒருங்கிணைப்புகள்
குறிப்பு: தேவையான டெம்ப்ளேட்டில் தரவு பகிரப்பட்டிருந்தால், அதிகபட்சம் 500 சரக்கு யூனிட்களை Jumpstart திட்டத்தின் மூலம் இடம் மாற்றலாம். அதை விட அதிகமான சரக்கு யூனிட்களை இடமாற்றம் செய்வதற்கு, தரவு வடிவம் மற்றும் அளவின் அடிப்படையில் தனிக் கட்டணம் விதிக்கப்படும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளைத் தவிர, எந்தவொரு கூடுதல் உள்ளமைவும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் தனித்தனியாக பில் செய்யப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஒரு பயனருக்கு மூன்று மணிநேரத்திற்கு ரூ.3,000-ஐ ஒருமுறை பேமெண்ட்டாகவும் துணை நிரல்களுக்குக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கும் ஒரு தனித் திட்டமாகும்.
ஆம், sales@zakya.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொண்டு Jumpstart சேவையை நீட்டிக்கலாம்.
இல்லை, Jumpstart திட்டம் பிரிண்ட் டெம்ப்ளேட்டுகளுக்கான தனிப்பயனாக்கங்களை கொண்டிருக்காது. எங்கள் ஆதரவுக் குழுவை support@zakya.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது வேறு ஏதேனும் சேனல் மூலம் தொடர்பு கொண்டு உதவி பெறுங்கள்.
ஆம், கூடுதல் பயனர்களுக்கான பயிற்சிக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பயனருக்கு ரூ.3,000 செலவாகும்.
Zoho Spark வழங்கும் எங்கள் ஆன்லைன் பயிற்சித் திட்டத்தில் இணையஇங்கேபதிவு செய்திடுங்கள். Zakya பற்றிய அடிப்படைகளை அறிய எங்கள் வாராந்திர வெபினார்களில் பதிவு செய்திடுங்கள்.
ஆம், பெரிய தரவு இறக்குமதிகளுக்கு நாங்கள் உதவுகிறோம். 500 பொருட்களுக்கு மேலான தரவுகளுக்கு, எங்கள் தொழில்நுட்பக் குழு கோரிக்கையை ஆய்வு செய்து, ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் தேவைப்பட்டால் உங்களுக்குத் தெரிவிக்கும்.
ஆம், Zakyaஐ அமைப்பதில் உதவ எங்கள் குழு உங்களை நேரடியாகச் சந்திக்கும். இருப்பினும், தொழில்நுட்ப நிபுணரின் பயணத்திற்கு மற்றும் தங்குவதற்கு ஆகும் செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சேவையின் காலம் சுமார் மூன்று மணி நேரம் ஆகும். உங்களுக்குத் துணை நிரல்கள் தேவைப்பட்டால், கால அளவு மாறுபடலாம்.
இது ஒரு முறை செயல்படுத்தும் சேவையாகும், திட்டத்தில் பதிவுசெய்த பிறகு பணத்தை ரீஃபண்டு பெற முடியாது.
நிச்சயமாக! செயல்படுத்தியதும் உங்கள் Zakya கணக்கில் செய்யப்படும் தயாரிப்புத் தனிப்பயனாக்கங்களில் எங்கள் நிபுணர்கள் உங்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்.
தயாரிப்பைச் செயல்படுத்தியதும் எங்களின் பிரத்யேக ஆதரவுக் குழு உங்களுக்கு உதவுவார்கள். இது உங்கள் Zakya சந்தாவுடன் சேர்க்கப்பட்டுள்ளது.