எங்களின் ஒரு மணி நேர implementation வாக்குறுதி
ஒரு மணி நேரத்தில் உங்கள் ஸ்டோர் செயல்பாடுகளை நீங்கள் தொடங்குவீர்கள் என்பது Zakya-வின் வாக்குறுதி. Zakya பயன்படுத்தத் தொடங்குவதற்கு எளிமையான ஒரு தீர்வை நாங்கள் உருவாக்கியுள்ளோம், எனவே நீங்களும் உங்கள் ஊழியர்களும் மிகக் குறைந்த பயிற்சியுடன் software-ஐ பயன்படுத்தத் தொடங்கலாம். எங்களின் நிபுணர்கள், ஒவ்வொரு step-இலும் உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு மணி நேர implementation-இல் என்னவெல்லாம் கவர் செய்யபடும் என்று அறியுங்கள்
1. Basic sign-up மற்றும் உங்கள் பிசினஸ் profile-ஐ உருவாக்குதல்
உங்கள் பெயர், மின்னஞ்சல், கடவுச்சொல் மற்றும் மொபைல் எண்ணுடன் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். உங்கள் வணிகப் பெயர், வணிக வகை, வணிக முகவரி மற்றும் பிற முக்கிய விவரங்களுடன் product on-boarding பக்கத்தில் உங்கள் வணிகச் சுயவிவரத்தை பதிவிடலாம். நீங்கள் இப்போது Zakya-வை பயன்படுத்தத் தயாராக உள்ளீர்கள்!
2.வரி அமைப்புகளை configure செய்யுங்கள்
நீங்கள் GST பதிவு செய்யப்பட்ட வணிகமாக இருந்தால், உங்கள் GST அடையாள எண்ணை அப்ளிகேஷனில் உள்ளமைக்கலாம், மேலும் தேவையான அனைத்து வரி விவரக் குறிப்புகளும் உங்களுக்காக நிரப்பப்படும். உங்கள் வணிகம் GST பதிவு செய்யப்படவில்லை என்றால், உங்களுக்கு இந்தப் step தேவையில்லை.
3. இன்வெண்ட்டரி அமைப்பு
அடுத்த step, உங்கள் டேட்டா-வை Zakya க்கு import செய்வது. Product -இன் பெயர், வரி விகிதம், SKU, விலை, மற்றும் பிற தயாரிப்பு விவரங்களுடன் இணக்கமான வடிவத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் புள்ளிகள் உங்களிடம் இருந்தால், ஒரு தாளில் தனித்தனி column-களாக சேர்க்கப்பட்டிருந்தால், உங்கள் தயாரிப்புகளை எளிதாக Zakya க்கு import செய்யலாம்.
தேவையான வடிவமைப்பில் உங்கள் data இல்லை என்றால், எங்கள் வல்லுநர்கள் எப்படி Zakya க்கு விவரங்களை எளிதாக import செய்வது என்று உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
4. Product guidance
Zakya வை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் விற்பனை, கொள்முதல் போன்ற உங்கள் அன்றாட செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகிப்பது என்பதை அறியலாம். ரிபோர்டுகளை உருவாக்குவது மற்றும் நிகழ் நேர வணிக செயல்திறனை அளவிடுவது எப்படி என்பதை அறியுங்கள். கவுண்டர் பில்லிங் அப்ளிகேஷனைப் download செய்யுங்கள் மற்றும் உங்கள் மொபைல் ஸ்டோரை அமையுங்கள்.
5. கௌண்டர் பில்லிங் அப்ளிகேஷன்
Native பில்லிங் அப்ளிகேஷனை அமைப்பதே இறுதிப் படியாகும். புதிய விற்பனையை உருவாக்குதல், inventoryயிலிருந்து பொருட்களை cart-ல் சேர்ப்பது, register setup செய்தல் மற்றும் பணம் செலுத்துதல் போன்ற அடிப்படை step-களை அறியுங்கள்.
வெற்றி! ஒரு மணி நேரத்திற்குள் Zakya மூலம் உங்களின் அனைத்து ஸ்டோர் செயல்பாடுகளையும் பில்லிங் செய்து நிர்வகிக்கத் தயாராக உள்ளீர்கள்.
குறிப்பு: நீங்கள் ஏற்கனவே Zoho books, Zoho commerce அல்லது Zoho Inventory வாடிக்கையாளராக இருந்தால், data import பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் இப்போதே பதிவு செய்யலாம், உங்கள் product data வை sync செய்யலாம், அப்ளிகேஷனை download செய்து பில்லிங் தொடங்கலாம்.
ஒரு மணி நேர implementation இல் எவை அடங்காது?
பெரிய அளவிலான dataவிற்கு, import நேரம் மாறுபடும் மற்றும் ஒரு மணிநேர implementation-க்கு கீழ் வராது. கூடுதல் நேரம் தேவைப்பட்டாலும் எங்கள் நிபுணர்கள் இதற்கு உதவ முடியும்.
உங்கள் ஸ்டோர் ஹார்ட்வர் அமைப்பது சேர்க்கப்படாது. பிரிண்டர், weghing scale மற்றும் பில்லிங்கிற்குத் தேவையான configuration மற்றும் extensions போன்ற பொருத்தமான ஹார்ட்வர் கூறுகளைப் பரிந்துரைப்பதில் எங்கள் குழு உதவலாம், ஆனால் இது அந்த தொடக்க ஒரு மணிநேரத்தின் பகுதியாக இருக்காது.
Paytm மற்றும் Pine Labs போன்ற கட்டண டெர்மினல் integration மற்றும் வழிகாட்டுதல் சேர்க்கப்படாது.
உங்கள் accounting மற்றும் ஆன்லைன் ஸ்டோர் integration-களை அமைப்பது சேர்க்கப்படாது.