வளரும் ரீடெயில் பிசினெஸ்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவுகிறது.
கீழே ஸ்க்ரோல் செய்க
வளரும் ரீடெயில் பிசினெஸ்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவுகிறது.
கீழே ஸ்க்ரோல் செய்க



Zakya உருவான கதை
உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பிசினெஸ்களை பெருந்தொற்று பாதித்தது, மேலும் இது சிறு பிசினஸ்களுக்கு பாதகமானதாக அமைந்தது.
லாக்டவுன்கள் முடிவடைந்த பிறகும், ஆன்லைன் வணிகங்களால் 24/7 விற்பனை செய்ய முடிந்தது ஆனால் சிறிய கடைகள் ஒரு நாளைக்கு 10-12 மணிநேரம் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது.
இன்று, வணிக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. சில வணிகங்கள் தாக்குப்பிடித்து மீட்டெழுந்தன, சிலவற்றால் முடியவில்லை. இன்று வணிகங்கள் கன்வினீயன்ஸ் போன்ற புதிய வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் அதே நேரத்தில் தங்கள் விற்பனையை மீண்டும் சீரான பாதையில் கொண்டு வர முயற்சி செய்கின்றன.
வணிக உரிமையாளர்கள் தங்கள் வணிகத்தை நிர்வகிக்கவும், ஆன்லைனில் விற்பனை செய்யவும் மற்றும் தங்கள் கடையை தாண்டி விற்பனை செய்ய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இப்போது உணர்ந்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் ஒவ்வொரு ரீடைல் வணிகமும் எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதற்கான அவசியம் எழுந்துள்ளது.
சிறு வணிகங்கள் தங்கள் சமூகங்களுக்கு ஒரு அடையாளத்தை வழங்கி அவற்றை மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமானவர்களாகவும் உள்ளனர்.
இந்த சிறு தொழில்கள்தான் அதன் சுற்றுப்புறத்தின் தனித்துவமான தேவைகளை அடையாளம் கண்டு, அந்தத் தேவைகளை நிறைவு செய்யக் கூடுதலாக உழைப்பைச் செலுத்துகின்றன. Zakya தோன்றியது இவர்களுக்காகத்தான்.

சிறப்பாக விற்பனை செய்யவும், முழு வணிகத்தை நிர்வகிக்கவும் மற்றும் டிஜிட்டல் புரட்சியில் இணைய வழி தேடுகிற ஒவ்வொரு சிறு வணிகத்திற்கானது Zakya. ஒருங்கிணைந்த வியாபார POSக்கு வரவேற்கிறோம்.



வளர்ந்து வரும் ஒவ்வொரு ரீடெயில் வணிகத்தையும் மேம்படுத்துவதும், பொதுவாக பெரிய வணிகங்களுக்கு மட்டும் கிடைக்கும் டெக்னாலஜிஐ அவர்களுக்கு வழங்குவதும் Zakya இன் குறிக்கோளாகும். Zakya மூலம், அவர்களின் வணிகப் பயணத்தில் அடுத்த பெரிய நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருக்கும் வணிகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
Zakya என்ற பெயர்க்காரணம்
Zakya என்ற பெயர் சமஸ்கிருதத்தில் சாத்தியம் என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
இது ஜக் - யா என்று உச்சரிக்கப்படுகிறது.
Zakya ஆனது 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிளவுட் சாப்ட்வேர் வணிகத்தில் இருக்கும் ஒரு தொழில்நுட்ப தீர்வு வழங்குனர் குடும்பமான Zoho இன் ஒரு பகுதியாகும். எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாக இருந்து வருகின்றனர், அதே கொள்கையின் விரிவாக்கமாக Zakya நிறுவனத்திற்கான யோசனையும் பிறந்தது.

வளர்ந்து வரும் ஒவ்வொரு ரீடெயில் வணிகத்தையும் மேம்படுத்துவதும், பொதுவாக பெரிய வணிகங்களுக்கு மட்டும் கிடைக்கும் டெக்னாலஜிஐ அவர்களுக்கு வழங்குவதும் Zakya இன் குறிக்கோளாகும். Zakya மூலம், அவர்களின் வணிகப் பயணத்தில் அடுத்த பெரிய நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருக்கும் வணிகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
Zakya என்ற பெயர்க்காரணம்
Zakya என்ற பெயர் சமஸ்கிருதத்தில் சாத்தியம் என்று பொருள்படும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
இது ஜக் - யா என்று உச்சரிக்கப்படுகிறது.
Zakya ஆனது 25 ஆண்டுகளுக்கும் மேலாக கிளவுட் மென்பொருள் வணிகத்தில் இருக்கும் ஒரு தொழில்நுட்ப தீர்வு வழங்குனர் குடும்பமான Zoho இன் ஒரு பகுதியாகும். எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் செய்யும் அனைத்திற்கும் மையமாக இருந்து வருகின்றனர், அதே கொள்கையின் விரிவாக்கமாக Zakya நிறுவனத்திற்கான யோசனையும் பிறந்தது.